இடைத்தேர்தலிலும் விஜய் அலை வீசுமென ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதை தவிர்க்க முடியாது. அலை குறைத்து விட்டது என்றா கூறப்போகிறார்கள்? அலை இருக்கா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவு சொல்லும்? 5 மாதத்தில் ஒரு ஆட்சி எப்படிப்பட்டது என்று தீர்மானிக்க முடியாது.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். புதுவையில் சட்ட ஒழுங்கு சரியில்லை. போதை, கொலை, கொள்ளை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது.
புதுச்சேரி சட்டசபையில் அரசை எடுத்துரைக்க எம்.எல்.ஏ.க்கள் தேவை. அ.தி.மு.க., தி.மு.க. போன்ற எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமிக்கு ஜால்ரா போடுகின்றனர்.
மாகி தொகுதியில் மார்க்சிஸ்டு ஆதரவுடன் அசோக்குமார் வெற்றி பெற்றார். அவரோடு சேர்ந்து தட்டாஞ்சாவடியில் போட்டியிடும் சலீம் வெற்றி பெற்றால் இருவரும் மக்கள் பிரச்சினையை பேச முடியும்.
இருவர் தானே என நினைக்க வேண்டாம். தமிழகத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் விஜய் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாலும் 4 பேர் ஆதரவு தேவை. விஜய் அதிக எம்.எல்.ஏ.க்கள் பெற்றாலும் எங்கள் ஆதரவு இல்லையென்றால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. புதுச்சேரியில் 30 எம்.எல்.ஏ.க்களில், 2 பேர் இருந்தால் தவறுகள் நடக்க விடமாட்டோம்.
இடைத்தேர்தலிலும் விஜய் அலை வீசுமென ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதை தவிர்க்க முடியாது. அலை குறைத்து விட்டது என்றா கூறப்போகிறார்கள்? அலை இருக்கா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவு சொல்லும்? 5 மாதத்தில் ஒரு ஆட்சி எப்படிப்பட்டது என்று தீர்மானிக்க முடியாது. ஆனால் 5 மாதங்களில் நடந்துள்ள காரியங்களை பார்த்தால் மீதமுள்ள காலத்தில் என்ன மோசமாக நடக்குமோ? என பயமாக உள்ளது. சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு கொடுங்கள் என ஒரு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார் என்றால் நாளைக்கு தமிழ்நாட்டையே அம்பானிக்கு குத்தகைக்கு விட ஏன் சொல்ல மாட்டார்?
தமிழக அரசுக்கு ஆதரவு வாபஸ் என்ற பிரச்சினையே இல்லை. நிச்சயமாக அரசு தவறு செய்யும் போது எதிர்த்து உறுதியாக போராடுவோம். அன்று ஆதரவு தேவைப்பட்டது, இன்று ஆதரவு தேவை இருக்கா என்று கேள்விகள் உள்ளன. நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. பொதுத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி பார்க்கலாம்.
இடைத்தேர்தலில் ஒரு கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. தமிழக காவல்துறையை வைத்து கொண்டு ஜெம் வீரமணி மீது எப்படி நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு அடிவயிறு வலிக்கிறது. முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.