Manickam Tagore says politics prioritized over water issues 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மட்டும் தான் தண்ணீரை விட அரசியல் முக்கியமாக உள்ளது: மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் மட்டும் தான், நாட்டு நலனை விட, கட்சி மட்டுமே முக்கியமாக உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறை

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தொகுதி மறுவறையறை என்பது, தமிழகர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானது.

இந்த மசோதா சாமானிய மக்களுக்கு எதிராக வர உள்ளது, இதற்கு நாங்கள் முழு அளவில் எதிர்ப்பு தெரிவிப்போம்.

கடந்த 2026 ஏப்ரல் 17 அன்று தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக மற்றும் பாமக ஆகிய மூன்று கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

அப்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்த சமயத்தில் அதிமுக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகள் மாநிலங்களவையில் அங்கம் வகித்ததால், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.

தற்போது இந்த மூன்று கட்சிகளை தவிற, வேறு எந்த கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்கிறதோ, அது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம்.

காங்கிரஸ் கட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 13 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 62 மாநிலங்களவை உறுபினர்கள் உள்ளனர்.

அவர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இந்த மசோதா கடந்த 2026 ஏப்ரல் 17ஆம் தேதி, தோற்கடிக்கப்பட்ட போது இருந்த மனநிலை தான், தற்போதும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

காவிரி விவகாரம்

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை பொறுத்தவரையில், அவர் அம்மாநிலத்தின் நலனுக்காக தான் குரல் கொடுப்பார்.

நான் எனது தமிழ்நாடு மாநிலத்திற்கு தான் ஆதரவாக குரல் கொடுக்க முடியும். தமிழ்நாட்டின் நலன் தான் எனக்கு முக்கியம்.

தமிழக முதல்வர் இதுகுறித்து கர்நாடகா சென்று பேசுவதாக இருந்தால், அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நம்முடைய பிரச்சனை எப்படியாவது தமிழகத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கர்நாடகாவை பொறுத்தவரையில், அவர்களுக்கு அரசியலை விட தண்ணீர் தான் முக்கியமாக உள்ளது. அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒன்றாக நிற்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் தண்ணீரை விட அரசியல் தான் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான், நாட்டு நலனை விட, கட்சி மட்டுமே முக்கியமாக உள்ளது.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.