தமிழக செய்திகள்

TN Assembly Election | இன்னும் 2 நாட்களே உள்ளன.. இதுவரை 1,390 பேர் வேட்பு மனு தாக்கல்

தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது.

இன்று புனித வெள்ளி, 5ம் தேதி ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை மற்றும் 6ம் தேதி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு நாட்களில் இதுவரை 1,390 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாளில் 573 வேட்பாளர்களும், 2வது நாளில் 787 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமின்றி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT