தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை அமைச்சர் வினோத் உரை நிகழ்த்தினார். மண்வளப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:
மண் வளத்தை மேம்படுத்தி, இயற்கை முறையில் விவசாயத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.
மண்வளப் பாதுகாப்பிற்காகச் சிறப்பு ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.