தமிழக செய்திகள்

குடியரசு நாளில் இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெற உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி

77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பா அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "

நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இந்திய அரசியலமைப்பு அளித்த சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.

SCROLL FOR NEXT