திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சித்திரைக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது.
இந்த பஸ்சில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சநத்தத்தை சேர்ந்த வேல்முருகன்(வயது36) என்பவர் டிரைவராக இருந்தார்.
பஸ்சில் திருச்செந்தூரை சேர்ந்த சித்திரைக்குமார்(42) என்பவர் உள்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் என்ற கிராம பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சில் இருந்த சித்திரைக்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் வலியால் அவர் துடித்து கொண்டிருந்தார். இதனை அறிந்ததும் டிரைவர் வேல்முருகன் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த பயணி சித்திரைக்குமாரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சித்திரைகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சித்திரைக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.