தமிழ்நாடு செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விபத்து.விபத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்டனர்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.