தமிழக செய்திகள்

அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தி.மு.க.வில் இணைந்துள்ளேன் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

* தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

* அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

* தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.

* அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.