அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம் 
தமிழக செய்திகள்

'சூரியன்' குறித்து கருத்து சொன்ன அமைச்சர்- பதிலடி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்

ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சி காலங்களில் ஏன் செய்யவில்லை? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும்.

எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அரசின் பதிலுரை தொடங்கியது. இதில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வினோத் பதில் அளித்து பேசியதாவது:-

தொலைநோக்கு திட்டங்கள்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் த.வெ.க. வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார். த.வெ.க.வின் வேளாண் பட்ஜெட் வெற்ற பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது. ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சி காலங்களில் ஏன் செய்யவில்லை? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க தொலைநோக்கு திட்டங்கள் தேவை.

கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும். பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். எங்கள் திட்டங்களை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளோம். திட்டங்களின் பலனை மேம்படுத்தும் நோக்கில் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சியை விட கூடுதல் நிதி. அனைத்து மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட பரப்பளவை கண்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடித்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைவருக்கும் சூரியனால் வேர்த்தது. நீங்கள் வந்தபிறகு சூரியனுக்கே வேர்த்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சருக்கும், பேரவை தலைவருக்கும் நன்றி.

இவ்வாறு அமைச்சர் வினோத் உரையை நிறைவு செய்தார்.

அமைச்சர் வினோத் கூறியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், வேளாண்துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார்கள். அதனை நாங்கள் எல்லோரும் கூர்மையாக கேட்டுக்கொண்டு இருந்தோம். அவருடைய பதிலுரை முடிவில் சூரியனுக்கே வேர்த்தது என்ற கருத்தை கூறியுள்ளார். இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.