தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 24.33 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 28.30 லட்சம் வாக்குகளில் 83.7 சதவீதம் அதாவது 23.69 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
2016-ம் ஆண்டு 39.75 லட்சம் வாக்குகளில் 61.2 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2021-ம் ஆண்டு தேர்தலில் 40.04 லட்சம் வாக்குகளில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
தற்போதைய தேர்தலில் சென்னையில் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சமாக குறைந்தது.
நேற்று நடந்த வாக்குப்பதிவில் சென்னையில் 23.69 லட்சம் வாக்குகளே பதிவாகி உள்ளன.
SIR பணிகள் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.