தமிழக செய்திகள்

இனி மாதமாதம் மகளிருக்கு ரூ.2000, மாணவர்களுக்கு ரூ.1,500- திமுக தேர்தல் அறிக்கை வெளியானது!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.

தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை காண்போம்.

  • திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 19 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்புவரை விரிவுப்படுத்தப்படும்.

  • மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

  • இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொறுத்தாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

  • தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

  • முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.