கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு தரமற்ற மற்றும் விலை அதிகமாக வைத்து புத்தகங்களை வாங்கியுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஊழல் மட்டும் நிகழவில்லை. தலைமுறையின் அறிவு திருட்டு நடைபெற்றுள்ளதாக திமுக மீது த.வெ.க. வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேவேளையில் த.வெ.க.தான் புத்தகங்களை கொள்முதல் செய்ததாக திமுக குற்றம்சாட்டியது. பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் திமுக ஆட்சியில்தான் கொள்முதல் செய்யப்பட்டது, கருவூலத்தில் இருந்து பணம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது என்று ஆதாரத்துடன் வெளியிட்டார்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அருண் ராஜ் அளித்த பதில் பின்வருமாறு:-
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக-வினர், அவர்களுடைய ஆட்சியில் கொள்முதல் செய்யவில்லை என்கின்றனர். கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆதாரத்துடன் நேற்று விவரமாக எடுத்துரைத்துள்ளார்.
பிப்ரவரி மாதம் கொள்முதல் செய்யப்பட்டு, மார்ச் மாதம் கருவூலத்தில் இருந்து பணம் சென்றுள்ளது தெரிகிறது.
தவறு செய்த பின்னரும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல், மற்றவர்கள் மீது பழி போடுவதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள். திமுக-வுக்கு இது மிகப்பெரிய களங்கள்.
பெரியார், அண்ணா பெயரை வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பமே நல்லா இருக்கனும், ஒரு குடும்பம் மட்டுமே கொள்ளை அடிச்சி..,
அதை பார்ட்டி பண்ட் என்று சொல்வது தவறு. பார்ட்டி பண்ட் என்றால் ஒட்டுமொத்த நிர்வாகிகளுக்கு செல்லும். பேமிலி பண்ட் ஆக கலெக்ட் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள திமுக-வினர் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். ஒரு குடும்பம் மட்டும்தான் நல்லாயிருந்து., பேமிலி பண்ட்-க்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.