தமிழக செய்திகள்

இபிஎஸ் இல்லை... சி.வி.சண்முகம் தரப்பை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!

சி.வி. சண்முகம் அலுவலகத்தில் அதிமுக தலைவர்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, வாழ்த்துப் பெற்று வருகிறார்.

நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிலையில் இன்று ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துப் பெற்றார்.

இந்நிலையில் அதிமுகவின் ஒருதரப்பான சிவி சண்முகம் மற்றும் வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து விலகி, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளரான இபிஎஸ்ஸை இன்னும் சந்திக்கவில்லை. அடுத்ததாக தேமுதிக அலுவலகம் செல்லவுள்ளார்.