வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய ஆலோசனைகள் வழங்கினார்.
டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்தும், மாநில அளவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.