தமிழக செய்திகள்

தமிழகம் செய்த நலத்திட்டங்களை வேறு எந்த மாநிலமும் செய்ததில்லை: மு.க. ஸ்டாலினுடன் இணைந்து கெஜ்ரிவால் பிரசாரம்

என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும் என சென்னையில் பரப்புரை மேற்கொண்ட கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடன் இணைந்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

* பாஜக-வின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது.

* தமிழகத்தை கைப்பற்ற பாஜக நினைக்கிறது.

* டெல்லியில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை பாஜக நிறுத்தியது.

* முதல்வர் ஸ்டாலின் எனது சகோதரர்.

* மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் உழைக்கின்றார்.

* தமிழகம் செய்த நலத்திட்டங்களை வேறு எந்த மாநிலமும் செய்ததில்லை.

* என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும்.

* தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல, இந்தியாவுக்காகவும் போராடுகிறார் ஸ்டாலின்.