தமிழக செய்திகள்

இனி ஊண் உறக்கம் கிடையாது - முதல்வர் ஸ்டாலின் | TN Assembly Elections

ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 நடக்க உள்ளது.

ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள பதிவில், உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்.

வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிடமாடல் சாதனைகள், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள், அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்! இதுதான் தி.மு.க.

ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT