தமிழக செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா

செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத்.

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

பின்னர், இதுதொடர்பாக தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை.

நெல்லை மூட்டைகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.

100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவதோடு நிறுத்தாமல் அதனை விளைநிலங்களாக மாற்றுவதையே தேமுதிக விரும்புகிறது.

ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் நமது விளைபொருளை வெளிநாட்டில் வாங்க மறுக்கின்றனர்.

நேற்றும், இன்றும் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்து திட்டங்களை அறிவித்துள்ளனர்.

இந்திய வேளாண் பொருட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்ல இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறியிருக்கிறார். அது மகிழ்ச்சி தான். ஆனால்,முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும், எதற்கு அடுத்த ஜென்மம்.

கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மாவட்டந்தோறும் நலிவுற்ற பதப்படுத்தும் ஆலைகளை மறுசீரமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத், இது செயலாக்கம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.