தமிழக செய்திகள்

தேர்தலில் போட்டியில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு

2026 தேர்தலில் போட்டியிடவில்லை என மநீம அறிவித்துள்ளது.

மாலை மலர்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளது.

இந்நிலையில் இத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடவில்லை எனவும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திமுக - மநீம இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்ட நிலையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. மநீம தரப்பில் 4 தொகுதிகள் வரை கேட்கப்பட்ட நிலையில், திமுக தரப்பில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததாக முந்தைய பேச்சுவார்த்தைகளில் கூறப்பட்டது.

தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மநீம போட்டியில்லை என அறிவித்துள்ளது.