தமிழக செய்திகள்

ஆளுநர் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை - நிர்மல்குமார்

ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் நேற்று ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரசு அமைக்க வருமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்காதது பேசும்பொருளாகி உள்ளது.

இதனிடையே, ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை பெறும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்க விடுத்த நிலையில் த.வெ.க. இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற நிர்மல் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார் கூறுகையில்,

ஆதரவை கோரியுள்ளோம், ஆலோசித்து முடிவு என சொல்லியிருக்கிறார்கள். என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம். ஐயூஎம்எல் கட்சிக்கும் அழைத்து விடுத்துள்ளோம்.

ஆளுநர் மாளிகையில் இருந்து தான் தவெகவுக்கு அழைப்பு வந்தது. போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று விஜய் தான் தெரிவித்தார். ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி நடப்பார் என்று நம்புகிறோம், இல்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு கேட்டு சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகத்தை த.வெ.க. இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.