தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கே.செந்தில்குமாரி ஐபிஎஸ், சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு எஸ்பியாக இருந்த டோங்ரே பிரவின் உமேஷ், திருச்சி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் எஸ்பி ஷ்யாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பி-2ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை போக்குவரத்து துணை காவல் ஆணையராக இருந்த எஸ்.அசோக்குமார், தென்காசி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த அக்ஷய் அனில் வகாரே, பதவி உயர்வு செய்யப்பட்டு திருப்பத்தூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த லலித் குமார் பதவி உயர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.