பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்பது ஆய்வில்தான் உள்ளது. அது ரத்து என்றால் துறை அமைச்சர் தான் வெளியிடுவார். ஆனாலும் சென்னை மாநகருக்குள் தான் புதிய தலைமைச் செயலகம் அமையும்.
சென்னையில் அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணைவேந்தர்
தமிழ்நாட்டில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் இல்லை. கடுமையான நெருக்கடிக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த கவர்னர் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் கவர்னர் அனுமதி கொடுக்காமல் உள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்பது ஆய்வில்தான் உள்ளது. அது ரத்து என்றால் துறை அமைச்சர் தான் வெளியிடுவார். ஆனாலும் சென்னை மாநகருக்குள் தான் புதிய தலைமைச் செயலகம் அமையும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வோடு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை என்றால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் ராஜினாமா செய்து இருக்கமாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமியை நம்பியாரும் அக்கட்சியில் சேர முடியாத நிலை உள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு தெளிவாக இருக்கும். த.வெ.க வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் ஒரு 10 நபர்களை வைத்து தி.மு.க., அ.தி.மு.க. கோஷம் போடுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் எதனால் ராஜினாமா செய்தார்கள் என மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது.
தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்த பின் அம்மா விசுவாசிகள் அங்கு இருக்க முடியாது என்பதால் த.வெ.க.வில் சேருகிறார்கள்.
ரூ.1020 கோடி ஊழல் புகார் தொடர்பாக சென்னையில் இருந்து லண்டன் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் உதவியாளர் கவிபிரசாத், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, கவிபிரசாத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் லண்டன் செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
கவிபிரசாத்திடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ஏற்கனவே தீவிர விசாரணை நடத்தி இருந்தனர். அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையின் லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், விமான நிலையத்திற்கு வந்த கவிபிரசாத் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.