அரிசி விலை ஏற்றம், மழையின்மை மற்றும் எல் நினோ போன்ற சூழ்நிலையில் அரிசியை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டு சேவையை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய ரங்கோலி கோலம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தேசிய மகளிர் அணி மூத்த நிர்வாகியும் ஆந்திர மாநில பா.ஜ.க. பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் மகளிர் அணியினருக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த விடாமல் கடுமையான அடக்கு முறையே கையாளப்பட்டது. அதே நிலையை தற்போது த.வெ.க. கையாள்கிறது.
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம் குறித்து யூகங்களுக்கு ஒருபோதும் பதில் சொல்ல இயலாது. பா.ஜ.க.வை பொருத்தவரை யாருக்கு எந்த நேரத்தில் எந்த பதவி வழங்குவது என்பது தலைமையின் முடிவு.
தலைவர் முதல் தொண்டர் வரை கொடுக்கும் சிறப்பான பணிகளை முடிப்பதே எங்களின் நோக்கம். அரிசி விலை ஏற்றம், மழையின்மை மற்றும் எல் நினோ போன்ற சூழ்நிலையில் அரிசியை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும்.
குறிப்பாக அரிசி ஆலைகள் மொத்த விற்பனையாளர்கள் இவர்களை கண்காணித்து எந்தவித தவறும் நடக்காமல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு உறுதி ஏற்க வேண்டும்.
இதற்கு மத்திய அரசு பெரும் உறுதுணை புரியும். அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற முதல் 5 இடங்களில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜெகதீசன், பா.ஜ.க. நிர்வாகிகள் ஓம் சக்தி பெருமாள், அதிசயம் குமார், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெயலட்சுமி காயத்ரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.