தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?
தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.
அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.
பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். 4வது முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று தான் கேட்கிறோம்.
மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.
நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.