முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவை மறுசீரமைத்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த குழுவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 54 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். குழு உறுப்பினர்களாக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ராஜ்மோகன், விஸ்வநாதன், காந்திராஜ் உள்ளிட்ட 7 பட்டியலின அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். அதேப்போல பட்டியலின பிரிவைச் சேர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், சசிகாந்த் செந்தில், ஆ.ராசா உள்ளிட்ட 8 எம்.பி.க்கள், 37 எம்எல்ஏக்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களை தடுப்பதற்கும், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த உயர்நிலை கண்காணிப்புக் குழு முக்கிய பங்காற்றும்.
மேலும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உரிய நீதி மற்றும் நிவாரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.