தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 13-ந் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 13-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் கடந்த வாரத்தில் அர்னாப் புயல் மற்றும் முரசு புயல் உருவாகி ஆந்திரா நோக்கி கடந்து சென்றது.
இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் மழை எதிர்பார்த்த அளவு கிடைக்காமல் ஏமாற்றம் அளித்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 13-ந் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வலுபெற்று தமிழகத்திற்கு மழை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும்.
ஆனாலும் அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெறும் என்றும் புயலாக உருவாகுமா என்பதை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரை அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.