சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் எம்.ஏ. சித்திக்குக்குப் பதிலாக, புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.
1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஆஷிஷ் சாட்டர்ஜி, சமீபத்தில் மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்து, தமிழ்நாடு அரசுப்பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.