நெல்லை கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடியில் மின்கல உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் விக்ரம் சோலார் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆலையின் மூலம் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.