சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்ப் வைத்து அப்புறப்படுத்தும் பணியில் ெரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியிலும் கனமழைகொட்டியது. பலத்த மழையின் காரணமாக ஆவடி அடுத்த நெமிலிச்சேரி ெரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது.
இதனால் பயணிகள் அவ்வழியே செல்ல கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்ப் வைத்து அப்புறப்படுத்தும் பணியில் ெரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. அவ்வப்போது விட்டு,விட்டு பெய்து வரும் பலத்த மழை மிரட்டி வருகிறது.