தமிழக செய்திகள்

எஸ்டிபிஐ சார்பில் திமுக சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டி!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் SDPI கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய சமூக ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

எஸ்டிபிஐ-யுடன் சேர்த்து மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், எஸ்டிபிஐக்கு நன்னிலம் தொகுதி இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்டிபிஐ சார்பில் நன்னிலம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.