தமிழக செய்திகள்

NEET | மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க உதவி எண் அறிமுகம்

உங்கள் உயிரைவிட எந்தத் தேர்வும் முக்கியமில்லை.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று இரவு வெளியானது. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பிரத்தியேக உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்று தேசிய முகமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வர்களே, உங்கள் மனநலமும், நல்வாழ்வும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும். உங்கள் உயிரைவிட எந்தத் தேர்வும் முக்கியமில்லை.

நீங்கள் மன அழுத்தம், பதற்றம் அல்லது மிகுந்த மனச்சுமையை உணர்ந்தால், தயவுசெய்து 14416 அல்லது 1-800-891-4416 என்ற 'டெலி மனஸ்' பிரத்தியேக உதவி சேவை எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

இது 24 மணி நேரமும் இயங்கும். நீங்கள் விரும்பும் மொழிகளில் இதில் பேச முடியும். இலவசம், ரகசியங்கள் பாதுகாக்கப்படும். நீங்கள் தனியாக இல்லை, உதவி கிடைக்கும், இன்றே ஒருவரிடம் பேசுங்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.