தமிழக செய்திகள்

கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் 22 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு தொடங்கியது

தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடை​பெற்றது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ கல்​லூரி​களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவ கல்​லூரி​களில் பி.எஸ்.சி. நர்​சிங் படிப்பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வ படிப்​பின் அகில இந்​திய ஒதுக்கீட்டு இடங்​கள் ஆகியவை நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்​வில் தகுதி பெறு​பவர்​களை கொண்டு நிரப்பப்படுகின்​றன.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை ஆண்​டு​தோறும் நடத்துகிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் இன்று நடைபெற்றது. பிற்​பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5 மணி வரை தேர்வு நடை​பெறுகிறது.

தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​கள் மற்றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்கப்​பூர் என வெளி​நாடு​களில் 14 இடங்​களில் தேர்வு நடைபெற்றது. அந்த வகை​யில், சுமார் 5,500 மையங்​களில் தேர்வு நடந்தது.

சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 22.80 லட்​சம் பேர் நீட் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​திருந்தனர். அவர்கள் இன்று தேர்வை எழுதினார்கள். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெற்றது. இயற்​பியல், வேதி​யியல், உயிரியல் பாடங்​களில் இருந்து தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​பட்டன. அதில் 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும்.

ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படு​கிறது. ஒரு தவறான பதி​லுக்கு ஒரு மதிப்​பெண் குறைக்கப்படும்.

ஆள்​மாறாட்​டத்தை தடுக்​கும் வித​மாக, ‘நீட் தேர்வு நடை​பெறும் மே 3-ந் தேதி மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 2-ந்தேதி ஆகிய 2 நாட்​களும் எம்​.பி.பி.எஸ். மாணவர்​களுக்கு விடு​முறை வழங்க வேண்​டாம். அத்தியாவசி​ய காரணங்​கள் இருந்​தால் மட்​டும் விலக்கு அளிக்​கலாம்’ என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வ கல்லூரி​களின் நிர்வாகங்களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் கடந்த வாரம் சுற்​றறிக்கை அனுப்​பியது.

அதன்​படி, மருத்​துவ மாணவர்​களுக்கு நேற்று விடு​முறை வழங்​கப்பட​வில்​லை. இன்​றும்​ அனைத்​து மாணவர்​களும்​ கல்​லூரிக்​கு வரு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தேர்​வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் அனு​ம​திக்​கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் தண்​ணீர் தெளிவாக தெரியும் வகையிலான குடிநீர் பாட்​டில்களை எடுத்​து செல்ல அனுமதிக்கப்பட்டது. மத நம்​பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்​களை அணியவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

சாதாரண ஆடைகளை அணியவும், முழுக்கை ஆடைகள் அல்​லது கம்பளி ஆடை அணியவும் அனு​ம​தி வழங்கப்பட்டு இருந்தது. முறையான சோதனைக்கு ஒத்​துழைக்​கும் வித​மாக, குறிப்​பிட்ட நேரத்துக்கு முன்​ன​தாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்.

தேர்வர்கள் உயரம் குறைந்த, சாதாரண காலணி​களை அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. உயர​மான காலணி​கள் மற்றும் கனமான அணி​கலன்​கள் அணிய தடைவிதிக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்​கு பிறகு வந்​தால் அனுமதி இல்​லை என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் அதற்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட தேசிய தேர்வுகள் முகமை திட்ட​மிடப்பட்​டுள்​ளது.