தமிழக சட்டப் பேரவை 
தமிழக செய்திகள்

மீண்டும் நீட் விலக்கு மசோதா - இன்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்

இன்று நடைபெறும் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேரலையில் ஒளிபரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில்  8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்ட சபை சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டம் நேரலையில் ஒளிபரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்து கார்த்தி சிதம்பரம் தெரிவித்தது கட்சியின் கருத்து அல்ல- ஜோதிமணி எம்.பி. பேச்சு