தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் DNA-வை சிதைக்க NDA முயற்சிக்கிறது..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான மகத்தான மாடல் திராவிட மாடல்.

மதுரையில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக வேட்பாளர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தளபதி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் தான் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சியில் மதுரைக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து ஏராளமானோர் போட்டி தேர்வுகளில் வெற்றிப்பெற்றுள்ளனர்.

பாசாங்கு இல்லாத பாசமிகு மக்கள் இருக்கும் ஊர் மதுரை.

பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த கீழக்கரையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 1.22 லட்சம் பேருக்கு இ-பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்.

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சொந்த மக்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டணியாக என்டிஏ கூட்டணி உள்ளது. மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான மகத்தான மாடல் திராவிட மாடல்.

மதநல்லிணக்கத்தை கெடுக்கிற ஆரிய மாடலை கொண்டு வர என்டிஏ கூட்டணி முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி. மதுரை மணிப்பூராக மாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி துடிக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.