தமிழக செய்திகள்

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய விருது- முதலமைச்சர் பாராட்டு

தேசிய விருதினை மத்திய அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.

மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.

இந்நிலையில், தேசிய விருது வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!

#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

A city's living standards are reflected in the reliability and quality of its public transport.இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள @MtcChennai-க்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு @sivasankar1ss அவர்களுக்கும்… https://t.co/V0l11F72X1