தமிழக செய்திகள்

நாங்குநேரியில் சொத்து தகராறில் தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்

தளவாய்க்கும், கிருஷ்ணராஜாவுக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

கொலை சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தளவாய் (வயது 75). இவரது மனைவி பெருமாள்தாய்.

சொத்து தகராறு

இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளின் மகன் கிருஷ்ணராஜா (20). கிருஷ்ணராஜா ஓய்வு பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரான மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆவார்.

தளவாய்க்கும், கிருஷ்ணராஜாவுக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

வெட்டிக்கொலை

இந்நிலையில் தளவாய் இன்று அதிகாலை நாங்குநேரி அண்ணா சாலையில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ண ராஜாவுக்கும், தளவாய்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணராஜா, தளவாயை தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தளவாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கிருஷ்ணராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கைது

இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி டி.எஸ்.பி. சதீஷ் கண்ணா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தளவாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் தப்பி ஓடிய கிருஷ்ணராஜாவை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT