நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வெங்கரை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் ஒரு வார்டில் பழனிசாமி என்பவர் போட்டியிட்டார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் மர்ம நபர்கள் திடீரென கற்கள் மற்றும் காலி மது பாட்டில்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கல், காலி மது பாட்டில் வீச்சு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்¬ல் வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று, கற்கள், காலி மதுபாட்டில்கள் வீசிய மர்ம நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெங்கரை பேரூராட்சியில் அ.தி.மு.க. 8 வார்டுகளிலும், தி.மு.க. 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று வெங்கரை பேரூராட்சியை கைப்பற்றியது.
ஆகவே தேர்தல் தொடர்பாக பழனிசாமி வீட்டில் கல்வீசினார்களா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.