தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை 25 காசுகள் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு  முட்டை விலை கடந்த 6 நாட்களாக எந்த மாற்றமின்றி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. 

உள்ளூர் கடைகளிலும் முட்டை விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில், நேற்று நடந்த தனியார் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, 25 காசுகள் விலை குறைத்து ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 405 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 20 காசுகள் முதல் 4 ரூபாய் 50 காசுகள் வரை விற்கப்படுகிறது. 

மேலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.