முட்டை 
தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் 2 நாட்களில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு

சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 550 காசுகளாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 560 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகத்தில் சத்துணவு திட்டம் தவிர வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 550 காசுகளாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 560 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

2 நாட்களில் 20 காசுகள் உயர்வு

இந்த நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் ேதவை அதிகரித்துள்ளதால் அதன் விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

முட்டை

அதன் தொடர்ச்சியாக 560 காசுகளாக இருந்த முட்டை விலை 570 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 131 ரூபாயாக நீடிக்கிறது. 118 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 2 ரூபாய் குறைந்து 116 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT