தமிழக செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கியவர் நல்லக்கண்ணு- பிரேமலதா

நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர். நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நல்லக்கண்ணு மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நேர்மையான அரசியல்வாதி..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கியவர் நல்லகண்ணு

லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்; பொதுமக்களின் நலனுக்காக போராடிய நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.