தமிழக செய்திகள்

TN Assembly Election| சாத்தூரில் போட்டியிடுகிறேன்... பாஜக மேலிடம் அறிவிப்பிற்கு முன்பே அறிவித்த நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்.

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும்.

* சட்டசபை தேர்தலில் நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

* அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமை முடிவு செய்யும்.

* பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு செய்துள்ளது. தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாவதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.