விஜய் உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை- நயினார் நாகேந்திரன்| TN Assembly Election

தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வர உள்ளார்.
விஜய் உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை- நயினார் நாகேந்திரன்| TN Assembly Election
Published on

நெல்லை:

நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரி பியூஸ் கோயல் வரும்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். பியூஸ் கோயல் ஓரிரு நாட்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பின்னர் அறிவிப்போம்.

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் உள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

கடந்த தேர்தலுக்கு முன்னரே அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் அனைவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் விஜய் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மீது வழக்கு இருக்கும் சூழலில் இப்போது அதை வைத்து மிரட்டுவதாக சொன்னால் சரியானதாக இருக்குமா?.

தமிழக பா.ஜ.க.வின் தலைவர் என்ற முறையில் நீங்கள் சொல்லும் யாருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜய் கட்சியில் இருந்தும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் பிம்பம், கம்பம் என்பதெல்லாம் தேவையில்லாதது.

80 தொகுதிகள், துணை முதலமைச்சர் போன்ற ஆபர் கொடுப்பதாக ஆதவ் சொல்கிறாரே என கேட்கிறீர்கள். ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே தெரியாது.

தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வர உள்ளார். அவர் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நிதின் நபீன் என அகில இந்திய தலைவர்கள் பலரும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் போன்றோரும் தேர்தல் பிரசாரத்திற்காக வர உள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com