நயினார் நாகேந்திரன்  
தமிழக செய்திகள்

ரூ.1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட அரசு!- நயினார் நாகேந்திரன்

ஒரு பக்கம் 'புதிய முதலீடுகளை ஈர்க்கிறோம்' என கோட்-சூட் மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஜெட் வேகத்தில் பறப்பதும், அங்கு போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் 'வைப்' ஏற்றுவதுமாக முதல்வர் தீவிரமாக இருக்கிறார்.

ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை ஆந்திராவிடம் இழந்தது, தமிழ்நாட்டின் தொழில்துறை மந்தநிலையை வெளிக்காட்டுகிறது. பிம்ப அரசியலை விடுத்து, உண்மையான ஆளுகையை நோக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திரையில் காட்டப்படும் ‘மாஸ்’ பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த ‘ரியாலிட்டி செக்’ (Reality Check). ஹூண்டாய், கியா நிறுவனங்களின் சப்ளையர்களான கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின் (Hwashin), செஷான் (Seoyon) மற்றும் ஐவாமெட் (Iwamet) ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த வாய்ப்பு கைநழுவி ஆந்திராவுக்குச் சென்றிருப்பது விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் தொழில்துறை மந்தநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.

பிம்ப அரசியலை...

ஒரு பக்கம் 'புதிய முதலீடுகளை ஈர்க்கிறோம்' என கோட்-சூட் மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஜெட் வேகத்தில் பறப்பதும், அங்கு போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் 'வைப்' ஏற்றுவதுமாக முதல்வர் தீவிரமாக இருக்கிறார். ஆனால், "கையில் இருக்கும் வெண்ணெயை நழுவவிட்டுவிட்டு நெய்க்கு ஊர் சுற்றும் கதையாக", ஏற்கெனவே மாநிலத்தின் வாசலில் நின்ற நிறுவனங்களையே தக்கவைக்கத் திராணியின்றி தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திர அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு முதலீடுகளைத் தட்டிச் சென்றபோது, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என்ன செய்து கொண்டிருந்தார்? ஆட்சி நடத்துவது மாஸான வெளிநாட்டுச் சுற்றுலா அல்ல; போட்டி நிறைந்த சந்தையில் உடனடி முடிவுகளும், திறமையான பேச்சுவார்த்தைகளுமே முதலீடுகளைத் தக்கவைக்கும் என்பதை தவெக அரசு எப்போது உணரப்போகிறது?

இதன் இறுதிப் பாதிப்பு, தமிழக இளைஞர்களுக்கான 1,400-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளும் பொருளாதாரப் பலன்களும் எல்லை தாண்டி ஆந்திராவிற்குச் சென்றது தான். புதிய மாற்றத்தை எதிர்பார்த்து நின்ற இளம் தலைமுறைக்கு, இதுபோன்ற தொடர் தொழில் இழப்புகள் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளன. இனியாவது வெற்று வெளிநாட்டு ‘பிம்ப அரசியலை’ விடுத்து, கையில் இருக்கும் தொழில்களைக் காக்கும் உண்மையான ஆளுகையை (Real Governance) நோக்கி முதலமைச்சர் விஜய் நகரவில்லை என்றால், பக்கத்து மாநிலங்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை மகுடத்தைப் பறித்துச் செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT