குழந்தை பலி 
தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் காய்ச்சலுக்கு குழந்தை பலி

குழந்தை சாஷ்விக்கின் உடல் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

காய்ச்சல் காரணமாகவே குழந்தையை இறந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் பிரேத பரிசோதனை முடிவில் தான் சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நாகர்கோவில் புத்தேரி பெருமாள்நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித்(வயது39). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஸ்ரீஜித்தின்

ஒன்றரை வயது குழந்தையான சாஷ்விக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனது குழந்தையை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

குழந்தைக்கு காய்ச்சல்

அங்கு சிகிச்சை அளித்தும் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனைத்தொடர்ந்து குழந்தை சாஷ்விக்கை வெட்டூர்ணிமடத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை சாஷ்விக்கின் உடல் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

வடசேரி போலீஸ் நிலையம்

தனது குழந்தை இறந்தது குறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் ஸ்ரீஜித் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தை சாஷ்விக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காய்ச்சல் காரணமாகவே குழந்தையை இறந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் பிரேத பரிசோதனை முடிவில் தான் சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT