தமிழக செய்திகள்

த.வெ.க-ன் கொள்கை பேரறிவிப்பு தமிழகத்திற்கு நலன் பயக்கட்டும்: சீமான் வாழ்த்து

85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.முதல் அரசியல் மாநாட்டிற்காக தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல் அரசியல் மாநாட்டிற்காக தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது:-

அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்!

தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT