தமிழக செய்திகள்

கடலில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் - கடப்பாக்கத்தில் பரபரப்பு

மர்ம பொருளை மீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மீட்கப்பட்ட மர்மபொருள் தற்பொழுது செய்யூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆலம்பரகுப்பம் கடற்கரையில் இன்று காலை சுமார் 7 அடி நீளத்தில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது. ராக்கெட் லாஞ்சர் போன்று இருந்த இந்த உருளையை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சூனாம்பேடு போலீசுக்கும், வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மர்ம பொருளை மீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது கடலில் ஒத்திகைக்காக ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சரின் உதிரிபாகம் அல்லது கப்பலின் உதிரி பாகங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று மீனவர்கள் கூறினர். மீட்கப்பட்ட மர்மபொருள் தற்பொழுது செய்யூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடற்கரையில் மர்மபொருள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT