கஞ்சா செடிகளை போலீசார் அகற்றியபோது எடுத்த படம் 
தமிழக செய்திகள்

அம்பத்தூர் அருகே காலி இடத்தில் கஞ்சா செடி வளர்த்த மர்ம கும்பல்

அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து இருந்தது தெரிந்தது.

தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் சோதனை செய்தபோது அங்கு கஞ்சா செடிகள் வளர்த்து இருப்பது தெரிந்தது.

அம்பத்தூரை அடுத்த புதூர் பகுதியில் உதவி கமிஷனர் குமார் தலைமையிலான போலீசார் குட்கா, புகையிலை பதுக்கல், விற்பனை தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கஞ்சா செடிகள்

அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் சோதனை செய்தபோது அங்கு கஞ்சா செடிகள் வளர்த்து இருப்பது தெரிந்தது. சுமார் ஒன்றரை அடி உயரத்தில் வளர்ந்து இருந்த கஞ்சா செடிகளை இன்ஸ்பெக்டர் சடையாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அகற்றினர்.

மர்ம நபர்கள் காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக அப்பகுதிக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT