மாதிரிப் படம் 
தமிழக செய்திகள்

ஆலங்குளம் அருகே கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிய மர்ம கும்பல்... 6 இளைஞர்கள் படுகாயம்!

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில், முகமூடி அணிந்து வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணில்பட்டவர்களையெல்லாம் வெட்டியுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்த பைக்குகள், கடை என அனைத்தையும் அடித்தும் நொறுக்கியுள்ளது.

இதில் 6 இளைஞர்கள் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நேற்று நெட்டூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் திருமணவீட்டாருக்கும், அருகிலிருந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் கல்யாணவீட்டிற்கு வந்த மேளகாரர்களுக்கும் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT