தமிழக செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் வணக்கம்- முதலமைச்சர் விஜய்

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன்.

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நன்றி உரையாற்றி வருகிறார்.

நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் வணக்கம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் இதயம் திருச்சி என்றால் எனது இதயமும் திருச்சி கிழக்கு தொகுதி தான்.

6 மாதம் அமைதியாக இருப்போம் என்றார்கள் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.

எங்கு புலம்புவது எனத்தெரியாமல் திருமண நிகழ்ச்சியில் கூட சென்று புலம்புகிறார்கள்.

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்தரித்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஏன் நாங்கள் கோட்ல சூட் போடக்கூடாதா? அதிகாரம் செலுத்துபவர்கள் தான் கோட், சூட் போட வேணுமா?

நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் தான் கோட், சூட் போடுகிறேன், கலர் கலராக ஒன்றும் போடவில்லையே.

தேர்தலுக்கு முன்பும் ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது அதிகாரத்தில் இல்லாமல் சும்மாவே இருக்கிறார்கள்.

இன்றும் இருசக்திகள் இடையில்தான் போட்டி, ஒன்று தூய சக்தி தவெக, தீய கச்தி திமுக இடையில்தான் போட்டி.

அதிமுகவும், திமுகவும் சேர்ந்து நம்மை ஆட்சியமைக்க விமாடல் தடுக்க முயன்றனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.