தமிழ்நாடு செய்திகள்

முரசொலி செல்வம் காலமானார்

முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம்.முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

மாலை மலர்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் (82) வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி செல்வம் மாரடைப்பு காரணமாக பெங்கரூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரசொலி செல்வம் காலமானார்.

முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். முரசொலி செல்வம் முரசொலி மாறனின் சகோதரருமாவார். முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் கட்சித்தொண்டர்களின் அஞ்சலிக்காக முரசொலி செல்வத்தின் உடல் வைக்கப்பட உள்ளது.