கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். அந்தோணி பிள்ளை சவுதியில் ஷிவானி என்ற பகுதியில் மீன்பிடிக்கும் போட்டில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
கடந்த மே 3 தேதி மீன்பிடிக்கும்போது ஈரான் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். சவுதி அரசாங்கம் முறையாக சிகிச்சை அளிக்காமல் அவசரம் அவசரமாக முதலுதவி அளித்து இந்தியா அனுப்பி வைத்தனர்.
மணக்குடி வந்த பிரபாகரன் அந்தோணி பிள்ளை உடல்நிலை மோசமடைந்து இங்கு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றபோது அவரது உடம்பில் உள் பகுதிகளில் காயம் மற்றும் சிதைவு, முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டுகள் சிதறல்கள் இருப்பது தெரிய வந்தது. அவரால் மீண்டும் தொழில் செய்ய முடியாத அளவிற்கு உடல்நிலை மோசமான நிலையில் உள்ள நிலையில் இருப்பதை அறிந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவரை நேரில் சந்தித்து நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் சவுதி தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் உயரிய மருத்துவ சிகிச்சை தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.